'சச்சின் : எ பில்லியன் ட்ரீம்ஸ்' இன்று வெளியாகிறது..! | 'Sachin: A billion dreams' movie today release

வெளியிடப்பட்ட நேரம்: 05:47 (26/05/2017)

கடைசி தொடர்பு:11:03 (26/05/2017)

'சச்சின் : எ பில்லியன் ட்ரீம்ஸ்' இன்று வெளியாகிறது..!

சர்வதேச கிரிக்கெட்டின் சாதனை நாயகன் சச்சினின் வாழ்க்கை  'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படமாக உருவாகியுள்ளது. பயோபிக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜேம்ஸ் எர்கின்சன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சச்சின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா ரசிகர்கள் எல்லோருமே பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். ட்ரெய்லர் வெளியாகி, அனைத்துத் தரப்பிலும் வரவேற்பைப்பெற்றுள்ள நிலையில், இன்று படம் வெளியாகிறது. கிரிக்கெட்டிலிருந்து விலகிய சச்சின் டெண்டுல்கரை வெள்ளித் திரையில் பார்க்க, கோடானு கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தில், சில கிரிக்கெட் வீரர்களும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.