பாக்ஸ் ஆஃபிஸில் சாதனைப் படைத்த சச்சின் படம்...!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ளது, 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்'. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜேம்ஸ் ஏஸ்கின் இயக்கத்தில், 200 நாட் அவுட் புரொடக்‌ஷன்  நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. 

Sachin A Billion Dollar


ஆவணப்பட பாணியில், சச்சினின் வாழ்க்கை குறித்து இதில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2,400 திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் 400 திரையரங்குகளிலும் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை, இந்தப் படம் பெற்று வருகிறது.

இந்நிலையில், பாக்ஸ் ஆஃபிஸிலும் இந்தப் படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அதன்படி, வெளியான முதல் நாளில் (நேற்று) இந்தியா முழுவதும் 8.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது  'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்'. ஆவணப்பட பாணியில் வெளியான இந்தியப் படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!