மாஸ் கெட்-அப்பில் ரஜினி... அசத்தும் 'காலா' ஷுட்டிங் ஸ்பாட் படங்கள்! | Kaala Shooting spot photos

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (28/05/2017)

கடைசி தொடர்பு:07:52 (29/05/2017)

மாஸ் கெட்-அப்பில் ரஜினி... அசத்தும் 'காலா' ஷுட்டிங் ஸ்பாட் படங்கள்!

ரஜினியைச் சுற்றி ஆயிரம் அரசியல் சர்ச்சைகள் இருந்தாலும், அவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் 'காலா' படத்துக்கு தயாராகி விட்டார். தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாகவுள்ளது. கபாலி, படத்துக்குப் பிறகு ரஜினி, பா.ரஞ்சித் இணைவதால், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக, இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி இந்தப்படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

காலா


'கபாலி' டீம் மீண்டும் இணைவது, படத்தலைப்பு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என அடுத்தடுத்த அறிவிப்புகள், படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. இந்நிலையில்,  சென்னையில் செட் அமைத்து ஷுட் செய்யலாம் என்று முதலில் திட்டமிட்டிருந்த நிலையில், மும்பை தாராவிப் பகுதியிலேயே  ஷுட் செய்தால்  நன்றாக இருக்கும் என்று ரஞ்சித் நினைத்ததால், 'காலா' டீம் மும்பைக்கு பறந்துள்ளது. இதையடுத்து, படத்தின்  ஷுட்டிங் இன்று தொடங்கியது.

 

காலா

இந்நிலையில், படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கறுப்பு வேஷ்டி, கூலிங் கிளாஸ், கறுப்பு முடி, வெள்ளை தாடி என்று ரஜினி மாஸ் கெட் அப்பில் காட்சியளிக்கிறார்.

காலா

காலா

காலா