வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (29/05/2017)

கடைசி தொடர்பு:15:40 (29/05/2017)

விஷாலுக்கு வில்லியாகும் வரலட்சுமி!

கோலிவுட்டில் மிகவும் பிஸியாக இருக்கும் விஷாலின் கைவசம் 'இரும்பு திரை', 'துப்பறிவாளன்' மற்றும் 'கருப்பு ராஜா, வெள்ளை ராஜா' ஆகிய படங்கள் உள்ளன. இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு படம் சேர்ந்துள்ளது.

விஷாலுக்கு மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் 'சண்டக்கோழி'. தற்போது இந்தப் படத்தின் பார்ட் 2வை தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. 

'சண்டக்கோழி 2'  மூலமாக மீண்டும் இணையவுள்ள விஷால், லிங்குசாமி கூட்டணியில் தற்போது வரலட்சுமியும் சேர்ந்துள்ளார். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கிறார், அதுவும் விஷாலுக்கு வில்லியாக நடிக்கிறார் என்று தகவல் வந்துள்ளது. மேலும், இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜூலையில் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க