வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (29/05/2017)

கடைசி தொடர்பு:19:07 (29/05/2017)

நயன்தாரா படத்தில் விஜய்சேதுபதி !!

அஜய் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் 'இமைக்கா நொடிகள்'. அதர்வா ஹீரோவா நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இந்தப் படத்தில் பாலிவுட்டைச் சேர்ந்த இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் நடித்திருக்கிறார்

.

 

அண்மையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் தட்டியது.  தற்போது படத்தைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா, அனுராக் காஷ்யப், ராக்‌ஷி கண்ணா தவிர விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இவரின் போர்ஷன் படத்தில் 15 நிமிடங்கள் இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கிறது.

கடந்த வருடம் தமிழில் வெளிவந்த 'டிமாண்டி காலனி' படத்தை இயக்கியவர் அஜய் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப் பாப் தமிழா இசையமைக்கும் இந்தப் படத்தில் ஆறு கொலைகள் வித்தியாசமான முறையில் நடக்குமாம். அதை மையமாக வைத்துதான் இந்தப் படத்தின் கதை நகரும் என்கிறார்கள். 

மேலும், இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனை அணுகினாராம் இயக்குநர் அஜய்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க