வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (30/05/2017)

கடைசி தொடர்பு:17:54 (30/05/2017)

தெலுங்கிலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி - தொகுப்பாளர் யார் தெரியுமா?

உலகெங்கிலும் ஹிட் அடித்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சி, கமல் தொகுத்து வழங்குவதன் மூலம் தமிழுக்கு வரவிருக்கிறது. அண்மையில் இந்த நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் வெளியானது.

ஜூன் 25-ஆம் தேதி விஜய் டி.வியில் ஒளிபரப்பாகயுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 14 பிரபலங்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில், 'ஸ்டார் மா' என்ற தெலுங்கு தொலைக்காட்சி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தெலுங்கிலும் ஒளிபரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளராக ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசப்பட்டு வருவதாகவும் அவர் சம்மதித்தால் பெரும் தொகை ஒன்று சம்பளமாகக் கொடுக்கவும் 'ஸ்டார் மா' நிறுவனம் ரெடியாகயுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்தத் தொகை ஸ்டார் மாவில் ஒளிபரப்பாகிய 'மீளு எவரு கோடிஸ்வரடு' நிகழ்ச்சிக்காக சிரஞ்சீவிக்குக் கொடுக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகயிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க