வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (01/06/2017)

கடைசி தொடர்பு:19:00 (01/06/2017)

15 மொழிகளில் வெளியாகும் 2.0..!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் 2.0. பாலிவுட்டைச் சேர்ந்த அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்‌ஷன் நடித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், அனிமேஷன் வேலைகள்  நடந்து வருகிறது. இந்நிலையில் 2.0 திரைப்படம் 15 மொழிகளில் வெளியாகும் எனத் தற்போது தகவல் வந்துள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் ஜப்பான், கொரியன், சைனீஸ் போன்ற இதர மொழிகளிலும் 2.0 ரிலீஸாகவுள்ளது. இந்தியில் ரிலீஸாகும் 2.0 படத்திற்கும் ரஜினி தன் சொந்த குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறாராம். ஆனால் அக்‌ஷய் குமார் தமிழிலில் டப்பிங் பேசுவாரா என்பது சந்தேகம்தானாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க