Published:Updated:

சென்னை மருமகளும்... ஜும்பா லஹிரியும்..!

சென்னை மருமகளும்... ஜும்பா லஹிரியும்..!

சென்னை மருமகளும்... ஜும்பா லஹிரியும்..!

சென்னை மருமகளும்... ஜும்பா லஹிரியும்..!

Published:Updated:
##~##
திகாரம் ஆட்டம் கண்டு விடுமோ என்று அஞ்சுபவர்கள் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கவே யோசிப் பார்கள். 'Fall of Giants’! இந்தப் புத்தகம் இன்றைய பரபர பெஸ்ட் செல்லர். எழுதியவர் த்ரில் எழுத்தில் மனதைக் கட்டிப்போடும் வெல்ஷ் எழுத்தாளர் கென் ஃபோலெட். தனது லேட்டஸ்ட் புத்தகமான 'Fall of Giants’-ஐ சென்னை மக்களுக்கு அறிமுகம் செய்ய வந்திருந்தார். நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கில் ஒரு மணி நேரம் வாசகர்களுடன் கலந்துரையாடல். கேள்விகள், ஆட்டோகிராஃப்கள். ''இருபதாம் நூற்றாண்டு வரலாற் றில் வெறுமனே கடந்து போகா மல், முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது!'' என்று சிரிப்பவரின் முந்தைய பெஸ்ட் செல்லர்கள், ‘The Pillars of the Earth’, ‘Lie Down with Lions’ மற்றும் ‘Eye of the Needle’. இது வரை 31 புத்தகங்கள் எழுதியிருப்பவரின் வயது 71.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை மருமகளும்... ஜும்பா லஹிரியும்..!

''உலக யுத்தங்களுடன் ஹிரோஷிமா போன்ற நிகழ்வுகளும் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. அதே சமயம் ஜனநாயகமும், பெண்களின் உரிமைக் குரல்களும் எழத் தொடங்கின. 'Fall of Giants’ என்கிற இந்தப் புத்தகம், முதல் உலக யுத்தம் மற்றும் ரஷ்யப் புரட்சியை ஐந்து குடும்பங்களின் பார்வையில் விளக்கிச் செல்கிறது!'' என்று சாய்ந்து அமர்கிறார். Fall of Giants கடந்த செப்டம்பரில் வெளியானது. வெளிவந்த சில நாட்களிலேயே 'நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லர்’ பட்டியலில் முதலிடம் பிடித்தது.

''இந்தப் புத்தகத்தை மூன்று தொகுதிகளாக வெளியிடும் எண்ணம். இரண்டாவது புத்தகம் 2012-ல் வெளிவரும். அதில் முதல் புத்தகத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின் குழந்தைகள் அப்போதைய பொருளாதார நெருக்கடியிலும், இரண்டாம் உலக யுத்தத்தின் இடையிலும் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்வதைச் சித்திரித்திருக்கிறேன். மூன்றாவது புத்தகம் 2014-ல் வெளிவரும். இதில் பனிப் போரின்போது அடுத்த தலைமுறைகள் எப்படி இருக்கப் போகின்றன என்பது கதைக் களம்!''

''இந்திய வரலாற்றை வைத்து ஒரு நாவல்..?'' என்று கேள்வியை முடிக்கும் முன் மையமாக யோசிக்கிறார். சிரிக்கிறார். ''அது அப்படியல்ல. வரலாற்றைப் படித்துவிட்டு எதையேனும் எழுதிவிட முடியாது. இந்திய வரலாற்றை ஆழ்ந்து அறிந்துகொண்டவர்கள் என்னைவிடச் சிறப்பாக எழுத முடியும்!'' கொஞ்சம் யோசிக்கிறார். சட்டென்று திசை மாறி, ''டி.வி. இன்று பயங்கரமான மீடியம் இல்லையா?'' என்று விசாரிக்கிறார்! ''வேறு எந்த வேலையும் இல்லாமல் வெறுமனே டி.வி. முன் அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எல்லாம் எழுத்தாளர்களாகிய நாங்கள் சிந்திக்க ஆரம்பித்துவிடுவோம். டி.வி-யால் கொடுக்க முடியாததை நாங்கள் கொடுக்க வேண்டும். என்ன தரலாம்? ஆழ்ந்த புரிதல். அதை எந்தக் காலத்திலும் டி.வி. தரவே முடியாது!''

சென்னை மருமகளும்... ஜும்பா லஹிரியும்..!

''வரலாற்று நாவலாசிரியர் நீங்கள். உங்கள் பார்வையில் இந்தியா எப்படி?'' என்ற கேள்விக்கு வருகிறது உடனடி பதில். ''சுமார் 89 கோடி மக்களுக்கு ஆங்கிலம் என்பது முதல் மொழியாக இருக்கிறது இந்தியாவில். இது ஒரு வகையில் இங்கிலாந்து நாட்டைவிடப் பெரிய அளவு. அதனாலேயே என்னைப்போன்ற ஆங்கில எழுத்தாளர்களுக்கு இங்கு நல்ல மார்க்கெட். சமயங்களில் இந்திய ஆங்கில எழுத்தாளர்களை விடவும்! நான் எழுதும் கதைகளில் வரும் சம்பவங்கள் போன்ற அனுபவங்கள் ஏதும் இல்லாத வாசகர்களும் என்னை விரும்பிப் படிப்பது எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. உதாரணமாக, பிரேசிலில் சர்ச் ஒன்றை உலோகக் காலத்தில் அந்நாட்டு மக்கள் கட்டியிருந்ததாக 'பில்லர்ஸ் ஆஃப்

சென்னை மருமகளும்... ஜும்பா லஹிரியும்..!

எர்த்’தில் எழுதியிருந்தேன். அது கற்பனைதான். ஆனால், அதை விரும்பிப் படித்துவிட்டுப் பலர் மெயிலில் கருத்து தெரிவிக்கிறார்கள்!''

''சென்னை எப்படி இருக்கிறது..?''

''ம்ம்ம்... என் மகன் ஓர் இந்தியப் பெண்ணைக் கை பிடித்திருக்கிறான். அவள் சென்னையைச் சேர்ந்தவள்!'' குழந்தைபோலக் கெக்கலிக்கிறார்.

''இன்று நீங்கள் வியக்கும் இந்திய எழுத்தாளர் யார்..? ஏன்?''

''ஜும்பா லஹிரி. ஏன்? வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!'' குறும்பாகச் சிரித்து விடைபெறுகிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism