'சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்..!’ - கமல் | May quit from cine industry says Kamalhassan

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (02/06/2017)

கடைசி தொடர்பு:19:42 (02/06/2017)

'சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்..!’ - கமல்

ஜிஎஸ்டி வரி விதிப்பு பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், திரைத்துறையினர் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது சரியல்ல என்று கூறியுள்ளார்.


பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியவர், "சினிமா சூதாட்டம் அல்ல, அது ஒரு கலை. ஹாலிவுட் படத்துக்கு நிகராக இந்திய சினிமாவை ஒப்பிட்டு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது தவறு. திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். அதனால் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 
மேலும், திரைப்படத்துறையினரின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். மாநில மொழி சினிமாவின் வெற்றியை அந்த மாநிலமே தீர்மானிக்கிறது. இந்தித் திரையுலகம் ஜிஎஸ்டி வரியை ஏற்றாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றும் கூறினார்.

இந்தச் சந்திப்பில் தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவர் எல்.சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க