அடுத்த வருடம் வெளியாகும் சஞ்சய் தத்தின் பயோ பிக்..! | Next year releases to Sanjai dutt biopic

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (03/06/2017)

கடைசி தொடர்பு:16:09 (03/06/2017)

அடுத்த வருடம் வெளியாகும் சஞ்சய் தத்தின் பயோ பிக்..!

பாலிவுட் சினிமா வரலாற்றில் தனது 46 வருடத்தை ஜூலை மாதம் 23ஆம் தேதி பூர்த்தி செய்யவுள்ளார் சஞ்சய் தத். இவரின் வாழ்க்கையை தற்போது படமாக எடுத்து வருகிறார், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர்தான் சஞ்சய் தத்தாக நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் ரன்பீர் கபூர். மேலும் அதிகமாக ஒர்க்-அவுட் செய்து தன்  உடல் எடையையும் அதிகப்படுத்தியுள்ளார். அவரின் கைகளின் எடை மட்டுமே 20 கிலோவுக்கு மேல் அதிகரித்துள்ளதாம்.


மேலும் சஞ்சய் தத் தனது உடலில் பல டாட்டூஸ் போட்டிருப்பார். குறைந்தது ஏழு டாட்டூக்களாவது இருக்கும். இதனால் ரன்பீர் கபூரும் சஞ்சய் தத் மாதிரியே தனது உடலிலும் டாட்டூஸ் போட்டுள்ளார். சஞ்சய் தத்துக்கு டாட்டூ போட்ட அதே நபரையே தனக்கும் டாட்டூ போட  வைத்துள்ளார் ரன்பீர்.

பாலிவுட் நடிகை தியா மிர்ஷா சஞ்சய் தத் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சஞ்சய் தத்தின் தோற்றத்தைப் போலவே இருக்கும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அது வைரலும் ஆனது. மேலும், இந்தப் படத்தில் மனீஷா கொய்ராலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், இந்தாண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த வருடம் மார்ச் மாதம் 30ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க