டிஜிட்டல் வடிவில் 'ஆளவந்தான்' திரைப்படம்..! | Aalavandhan digitalization coming soon

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (03/06/2017)

கடைசி தொடர்பு:19:53 (03/06/2017)

டிஜிட்டல் வடிவில் 'ஆளவந்தான்' திரைப்படம்..!

கமல் தன் உடல் மொழியை முற்றிலும் மாற்றி நடித்தத் திரைப்படம் 'ஆளவந்தான்'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தில் நந்து, விஜயகுமார் என இரண்டு கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார்.

ரவீணா டாண்டன், மனீஷா கொய்ராலா, அனுஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் 2001-ம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக, தமிழ் மற்றும் இந்தியில் வெளியானது. திரு, ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்தை, 600 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார் தாணு.

ஆளவந்தான்


ஆனால், அப்போது 'ஆளவந்தான்' திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. எதிர்மறையான விமர்சனங்களே படத்துக்குக்  கிடைத்தது. அதனால், தற்போது ரசிகர்களின் சினிமா ரசனை மாறியுள்ளதால். தயாரிப்பாளர் தாணு டிஜிட்டல் வடிவில் 'ஆளவந்தான்' படத்தை 500 திரையரங்குகளில் திரையிட முடிவு செய்துள்ளார். மேலும் ரிலீஸான ஆளவந்தானில் கட் செய்யப்பட்ட பல சீன்கள் புதிய ஆளவந்தானில் இருக்குமாம்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க