வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (04/06/2017)

கடைசி தொடர்பு:15:17 (04/06/2017)

பிரியங்கா சோப்ராவின் ட்ரீம் ரோல் இதுதானாம்?

Priyanka Chopra

பாலிவுட் நடிகை அந்தஸ்திலிருந்து விலகி தற்போது ஹாலிவுட் நடிகையாகி இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'பேவாட்ச்' ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. 

இந்நிலையில் ஹாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரும் கனவோடு இருக்கும் பிரியங்கா தனது அடுத்த ட்ரீம் ரோல் குறித்து கூறியுள்ளார். அதுபற்றி அவர், 'நான் இப்போது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். எனவே அடுத்ததாக ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அமெரிக்க திரைப்படங்களைப் பற்றி நான் நினைக்கையில், சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள்தான் நியாபகம் வருகின்றது. எனவே எனக்கும் சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே உள்ளது. அதுவும் எனக்கு ஒரு வித்தியாசமான 'சூப்பர் பவர்' இருக்க வேண்டும். 'பேட் கேர்ள்' கதாபாத்திரத்தில் நடிப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்' என்று தனது ஆசையை கொட்டி தீர்த்துள்ளார் பிரியங்கா.