வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (05/06/2017)

கடைசி தொடர்பு:12:04 (05/06/2017)

உதயநிதியை இயக்கப்போகும் ப்ரியதர்ஷன்!

'சரவணன் இருக்க பயமேன் ' திரைப்படத்துக்குப் பிறகு, 'பொதுவாக என் மனசு தங்கம்' மற்றும் 'இப்படை வெல்லும்' பட வேலைகளில் பிஸியாக இருக்கும் உதயநிதி, தன் அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

உதயநிதி


மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளிலும் அதிக படங்களை எடுத்து, பல விருதுகளை வென்றவர் இயக்குநர் ப்ரியதர்ஷன். தமிழில் ஆறு படங்களை மட்டுமே இயக்கியுள்ள இவர், தன் அடுத்த படத்துக்காக உதயநிதியுடன் கைகோத்துள்ளார்.
'சிநேகிதியே', 'லேசா லேசா', 'காஞ்சிவரம்' என இவர் தமிழில் இயக்கிய பல  படங்கள் பெரிதும் பேசப்பட்டன. குறிப்பாக, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இவர் இயக்கிய, 'காஞ்சிவரம்' திரைப்படத்துக்காக தேசியவிருதை வென்றார் ப்ரியதர்ஷன். மேலும், இந்தப் படத்தை மூன்சாட் என்டர்டெயின்மென்ட் சார்பாக சந்தோஷ் தயாரிக்கிறார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க