வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (05/06/2017)

கடைசி தொடர்பு:20:37 (05/06/2017)

கண்தானம் செய்தார் விஜய்சேதுபதி..!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் முன்னணி கதாநாயகனான விஜய் சேதுபதி தன் கண்களைத் தானம் செய்துள்ளார். மதுரையில் இன்று அகர்வால் கண் மருத்துவமனையின் புதிய கிளையைத் திறந்து வைத்த விஜய் சேதுபதி, ’நம் உடம்புக்கு ஒன்று என்றால் நாம் இருவரைத்தான் நம்புவோம் ஒன்று கடவுள் மற்றொருவர் டாக்டர். இவர்கள் இருவரும் நம் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். நமது உடலின் முக்கிய அங்கமாகத் திகழும் கண்களைக் காக்கவும், இயலாத ஏழைகளுக்கு அந்தச் சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும்’ என்றார்.

vijay sethupathi

அவர் ரசிகர்களைக் கண்தானம் செய்ய அறிவுறுத்தியதுடன்,  தன் கண்களையும் தானம் செய்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்தும் கலந்துகொண்டு கண்களைத் தானம் செய்ய அறிவுறுத்தினார்.

படம்: க.விக்னேஷ்வரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க