##~## |
''2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விவகாரத்தில், அனைத்துத் தகவல்களையும் விசாரணை அமைப்புகளிடம் கூறிவிட்டோம். தூசு மற்றும் புழுதி அடங்கிய பிறகு, உண்மை தெளிவாக வெளிப்படும்!''
- ரத்தன் டாடா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''தி.மு.க. ஆட்சியில் நாம் கொடுத்த தொல்லை தாங்காமல் கருணாநிதி, தொலைந்து போ என்றதால், வெளியேறினோம்!''
- ராமதாஸ்
''நாக்கு வழிக்கக்கூடப் பயன்படாத பதவி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி!''
- திருமாவளவன்

''தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேவை இல்லாமல் என்னைப்பற்றி விமர்சித்துவருகிறார். உடனே நிறுத்திக்கொள்ளவில்லை என்றால், காங்கிரஸாரே அவர் மீது நில அபகரிப்புப் புகார் கொடுப்பார்கள்!''
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
''சமச்சீர்க் கல்விப் பிரச்னையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கோபமும் அ.தி.மு.க. அரசின் மீது திரும்பி உள்ளதை முதல்வர் உணரவில்லை. அரசின் வீண் பிடிவாதம் தொடர்வதையே, நிதிநிலை அறிக்கை காட்டுகிறது!''
- வைகோ
