ரஜினியிடம் சினிமா வாய்ப்பு கேட்டாரா முதல்வரின் மனைவி?

ரஜினி தன் ரசிகர்களின் சந்திப்பின்போது, அரசியலுக்கு வருவது பற்றி சூட்சுமமாகப் பேசினார். அப்போதிருந்தே ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி அவரின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் எழுந்துள்ளது. 

amruta rajini


இந்நிலையில், 'காலா' படப்பிடிப்பில் பிஸியாக இருந்த ரஜினியை மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் நேற்று சந்தித்தார். 


இதுபற்றி அம்ருதா ட்விட்டரில், ‘சில சமூக பிரச்னைகளைப் பற்றிதான் நாங்கள் விவாதித்தோம்’ என்று கூறியிருந்தார். ஆனால், சமூக வலைதளங்களில் இவர்களின் சந்திப்புக்கு வேற ஒரு காரணமும் இருக்கலாம் என்று பேசப்படுகிறது. 

அதாவது, பாடகியான அம்ருதா, ரஞ்சித் இயக்கும் 'காலா' திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடி, அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகலாம் என்ற நோக்கத்தோடு ரஜினியைச் சந்தித்திருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. சமீபத்தில்தான் இவர் பாடி, நடித்த 'Phir Se' என்ற மியூசிக் ஆல்பம் வெளியானது. இதில் அம்ருதாவுடன் சேர்ந்து அமிதாப் பச்சனும் நடித்திருப்பார்.  
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!