நடிகர் சங்கத்தில் முதியோர் இல்லம் : விஷாலின் அடுத்த ஆக்‌ஷன்!

நடிகர் சங்க பொதுச்செயலாளராக விஷால் பதவியேற்றப் பின் நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணி ஆரம்பமானது. 26 கோடி ரூபாய் செலவுடன் கட்டப்படும் இந்த கட்டடத்தில் பல்வேறு வசதிகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

vishal

இந்நிலையில் நடிகர் சங்கம், முதியோர் இல்லம் கட்டும் முடிவிலும் உள்ளதாம். நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றபோதே முதியோருக்கான இல்லத்தை கட்டும் யோசனை அவர்களிடம் இருந்ததாம். மேலும், நடிகர் சங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் சங்க உறுப்பினர்களின் விவரங்களைப் பார்த்தபோது அதிக உறுப்பினர்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சரியான கவனிப்பு இல்லாமல் இருப்பது தெரிந்துள்ளது .அதனால் நடிகர் சங்கம், கைவிடப்பட்ட சினிமாத் துறையைச் சார்ந்த நலிந்த கலைஞர்களுக்காக முதியோர் இல்லத்தை கட்டும் முடிவை எடுத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!