Published:Updated:

அப்பாடக்கர் உரிமையாளர் யார்?

சமஸ், ப்ரீத்தி, நாகப்பன்

##~##

''நானே ஏடாகூடமான ஆளு... என்கிட்டயேவா?'' என்று தயாரானார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

''கேளுங்க ராஜா... கேளுங்க!'' என்று எதிர்த் தாக்குதலுக்குத் தயாரானார் நாஞ்சில் சம்பத்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''வம்புதும்புக்குப் போகாத நல்ல பிள்ளை பாஸ் நான்... குறும்பு எல்லாம் நமக்கு வேணாம். தெரிஞ்சதைச் சொல்றேன்!'' - இது கோபிநாத்.

''வில்லங்கமா மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்!'' - வந்தார் தமிழச்சி.

''நான் எல்.கே.ஜி-லயே வீக்கு... இதுல ஜி.கே. வேறயா?'' - சிணுங்கினார் திவ்யதர்ஷினி.

அப்பாடக்கர் உரிமையாளர் யார்?

பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை யில், ஜெயலலிதா எத்தனை முறை ஆஜராகி உள்ளார்?

சரியான பதில்: ஒரு முறைகூடக் கிடையாது.

மனுஷ்யபுத்திரன்: ''அந்த வழக்கில் தவறா மல் ஆஜராகுபவர் அதை விசாரிக்கும் நீதிபதி மட்டும்தான்!'

நாஞ்சில் சம்பத்: ''உங்கள் கேள்வியே தவறு. ஆஜரானால்தானே, அதுபற்றிய கேள்வி பிறக்க வேண்டும்?'

கோபிநாத்: 'கரெக்டா ஞாபகம் இல்லை!'

தமிழச்சி தங்கபாண்டியன்: ''யோசிக்கிறேன்!' (கடைசி வரை யோசித்துக்கொண்டே மட்டும் இருந்தார்!)

திவ்யதர்ஷினி: 'அறுபது கோடி பிரச்னையில் அம்மா மாட்டி இருக்காங்கன்னு மட்டும் தெரியும்!'

அப்பாடக்கர் உரிமையாளர் யார்?

தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுவது இது எத்தனையாவது முறை?

சரியான பதில்: மூன்றாவது முறை!

மனுஷ்யபுத்திரன்: ''எத்தனை முறை மறுபடி சேர்ந்தார்களோ... அத்தனை முறை!''

நாஞ்சில் சம்பத்: ''இனி சேரப்போவது எத்தனையாவது முறைனு கேளுங்க!''

கோபிநாத்: ''ம்... நாலாவது முறையா?''

தமிழச்சி தங்கபாண்டியன்: ''எண்ணவே முடியாதே... ஒவ்வொரு மாம்பழ சீஸனுக்குப் பிறகும்னு போட்டுக்குங்க!''

திவ்யதர்ஷினி: ''என்னது... தி.மு.க., பா.ம.க-வா? எனக்குத் தெரிஞ்சது எங்க அக்கா மட்டும்தாங்க!''

வடிவேலு மீது நில அபகரிப்பு வழக்குத் தொடர்ந்தவர் பெயர் என்ன?

சரியான பதில்: பழனியப்பன்.

மனுஷ்யபுத்திரன்: ''சிங்கமுத்து அல்ல!''

நாஞ்சில் சம்பத்: ''பழனியப்பன்!''

கோபிநாத்: ''பழனியப்பனோ... பழனிச்சாமியோ!''

தமிழச்சி தங்கபாண்டியன்: ''ஒருத்தர் மேல கேஸ் போட்டா, கேஸ் கொடுத்தவர் யார்னு தெரியும். இப்பதான் இது ஒரு ஃபேஷன் ஆயிருச்சே. நேத்து என் வீட்டு வாசல்ல போட்ட கோலம் மழையில் கரைஞ்சு பக்கத்து வீட்டு வாசலுக்குப் போயிடுச்சு. பயந்துக்கிட்டு இருக்கேன்... எப்ப வாசல் அபகரிப்பு வழக்கு என் மேல பாயும்னு!''

திவ்யதர்ஷினி: ''ஏங்க... ஜெயில், வழக்கு பத்தியே கேட்குறீங்க?''

பா.ம.க. எம்.எல்.ஏ. குருவின் பெயருக்கு முன் 'காடுவெட்டி’ என்ற பட்டப் பெயர் சேர்ந்ததன் காரணம் என்ன?

சரியான பதில்: அவர் காடுவெட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்!

மனுஷ்யபுத்திரன்: ''பசுமைத் தாயகத்தை உருவாக்க அவர் ஆற்றிய பணிக்காக!''

நாஞ்சில் சம்பத்: ''அவர்கள் மரம் வெட்டியது தெரியும். இவர் காடு வெட்டியதாகத் தெரியவில்லையே?''

கோபிநாத்: ''அவர் அந்த ஊரைச் சேர்ந்தவர்!''

தமிழச்சி தங்கபாண்டியன்: ''பசுமைத் தாயகத்தைத்தான் கேட்கணும்!''

திவ்யதர்ஷினி: ''எனக்கு எங்க வீட்ல வெச்ச பேர் திவ்யதர்ஷினி. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்!''

டி.ராஜேந்தர் நடத்தும் அரசியல் கட்சியின் பெயர் என்ன?

சரியான பதில்: லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்!

மனுஷ்யபுத்திரன்: ''அவரே மறக்க விரும்பும் ஒரு கெட்ட கனவை, நான் நினைவுபடுத்த வேண்டுமா?''

நாஞ்சில் சம்பத்: ''அவர் அப்படி ஒரு கட்சி நடத்துவதாக, ஊருக்குள் வதந்திதான் உலவுகிறது!''

கோபிநாத்: ''ல.தி.மு.க.''

தமிழச்சி தங்கபாண்டியன்: ''இந்த நிமிஷம் என்ன பேருன்னு கேட்டுச் சொல்லவா?''

திவ்யதர்ஷினி: ''எதுக்குங்க தனி பேர் வைக்கிறார்! அவர் ஒன் மேன் ஆர்மி!''

'அப்பாடக்கர்’ - உரிமையாளர் யார்?

சரியான பதில்: சென்னை இளைஞர்கள்!

மனுஷ்யபுத்திரன்: ''மாறன் பிரதர்ஸ்!''

நாஞ்சில் சம்பத்: ''அப்பாடக்கரா! அது என்னன்னு தெரியலையே ராஜா!''

கோபிநாத்: ''சாட்சாத் சகோதரர் சந்தானம்!''

தமிழச்சி தங்கபாண்டியன்: (பயங்கர சிரிப்புடன்...) ''என்னது அப்பா... அப்பா... அப்பா... டக்கரா? யாருங்க அவரு?''

திவ்யதர்ஷினி: ''சந்தானம்?''

அந்தரத்தில் மிதக்க நித்யானந்தா கண்டு பிடித்த வித்தை என்ன?

சரியான பதில்: குண்டலினி.

அப்பாடக்கர் உரிமையாளர் யார்?

மனுஷ்யபுத்திரன்: ''உருண்டலினி யோகா!''

நாஞ்சில் சம்பத்: ''குண்டலினி சக்தினு அவர் சொல்றார். ஆனால், உண்மையான பதில்... ரஞ்சிதா!''

கோபிநாத்: ''உலக மஹா வித்தை!''

தமிழச்சி தங்கபாண்டியன்: ''கற்பனை. அப்படியே பிராக்கெட்டுல பெண்களைப் பற்றினு போட்டுக்குங்க!''

திவ்யதர்ஷினி: ''ஏன் உங்க போன் காலை அட்டெண்ட் பண்ணேன்னு நானே நொந்துபோய் இருக்கேன்... ஏங்க நீங்க வேற?''