விக்ரமுக்கு வில்லன் ஆவாரா பாபிசிம்ஹா !

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'சாமி 2' படத்தின் வேலையில் செம பிஸியாக இருக்கிறது படக்குழு. 'இருமுகன்' படத்தின் தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் தயாரிக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளது.

பாபி சிம்ஹா

விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர். இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தமானார். இதுபற்றிய அறிவிப்பை, சில நாள்களுக்கு முன்பு படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டது. சாமி படத்தின் முதல் பாகத்தில் வில்லனாக  கோட்டா சீனிவாச ராவ் நடித்து பட்டையைக் கிளப்பினார். தற்போது, இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதை உறுதிசெய்த பாபி, இன்னும் பட ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாக கையெழுத்திடவில்லை. தற்போது, பாபிசிம்ஹா-விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் 'கருப்பன்' திரைப்படத்தில், நெகட்டிவ் ரோலில் நடித்துவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!