வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (12/06/2017)

கடைசி தொடர்பு:20:10 (12/06/2017)

அரவிந்த் சுவாமிக்கு கார்த்திக் நரேனின் பர்த்டே ட்ரீட்!

அரவிந்த் சுவாமி, இந்திரஜித், சந்தீப் கிஷண் என மூன்று கதாநாயகர்களை வைத்து 'துருவங்கள் 16' இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படம் 'நரகா சூரன்' .

கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் நரேன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் கதை, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்குப் பிடித்திருந்த போதிலும் அவரால் சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்க முடியமால் போனது. 

karthick naren

படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அப்டேட்ஸ் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இதர நடிகர்கள் பற்றிய அறிவிப்பு ஜூன் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என ட்விட் தட்டியுள்ளார். ஜூன் 18 ஆம் தேதி இந்தப் படத்தில் ஒரு நாயகனாக நடிக்கும் அரவிந்த் சுவாமியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் வெளியாகப் போகும் இந்தப் படத்தில் பாடல்கள் எதுவும் இடம்பெறப் போவதில்லை என்பது கூடுதல் தகவல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க