Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
##~##

•  'ப்ளேபாய்’ பத்திரிகை டாப்லெஸ் போஸ் கொடுக்க இப்போது இந்திய நடிகைகளுக்குத்தான் அதிகம் வலைவீசி வருகிறது. இதுவரை பெரிய நடிகைகள் யாரும் சிக்காத நிலையில், தீபிகா படுகோனேவிடம் மூன்று படங்களுக்கு 7.5 கோடி ரூபாய் டீல் பேசியிருக்கிறது ப்ளேபாய். ஆனால், 'முடியாது’ என மறுத்துவிட்டாராம் தீபிகா. இவர் ப்ளே கேர்ள் இல்லையோ!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•  இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட சமீபத்திய ஆய்வில், மாநகரங்களில் வாழ்பவர்கள் ஒரு நாளைக்கு உணவு அருந்த வெறும் 39 நிமிடம் 9 விநாடிகளே எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கிறது. காலை உணவுக்கு 7 நிமிடம் 20 விநாடிகள். மதிய உணவுக்கு 12 நிமிடம் 49 விநாடிகள். இரவு உணவுக்கு 19 நிமிடம் 39 விநாடிகளாம். மூணு வேளையும் 'ஃபாஸ்ட் ஃபுட்’!

• 'சோனியாவுக்கு என்ன ஆச்சு?’ - இது காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் அலை அடிக்கும் மில்லியன் டாலர் கேள்வி. காய்ச்சல் என்று காரணம் சொல்லி, திடீர் சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார். என்ன பிரச்னை, எந்த மருத்துவமனை என்று தெரியாமல் தொண்டர்கள் தவித்துக்கிடக்க, 'சோனியா நியூயார்க் ஸ்லோவன் கேட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதுதான் உலகின் நம்பர் 1 கேன்சர் சிகிச்சை மருத்துவமனை’ என்று தெஹல்கா பத்திரிகை தனது ட்விட்டர் தளத்தில் செய்தி வெளியிட, காங்கிரஸ் முகா முக்குள் அதிர்ச்சி அலை. இப்போது சோனியா அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக் கிறாராம். கெட் வெல் சூன் சோனியாஜி!

•  குட்டி ரேவதி, சுகிர்தராணி, சந்திரா, பரமேஸ்வரி போன்ற பெண் எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து 'பற’ என்கிற அமைப்பைத் துவக்கி இருக்கிறார்கள். படைப்பாளிகளுக்கான அமைப்பாக மட்டும் இல்லாமல், பெண்கள் தொடர்பான பிரச்னைகளைக் கையில் எடுத்துப் போராடுவதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். தலைவர், செயலாளர் போன்ற வரிசைக் கிரமப் பதவிகள் எதுவும் இல்லாமல், 'ஒருங்கிணைப்பாளர்’ என்பது மட்டும் இந்த அமைப்பில் பதவியாக இருக்குமாம். செப்டம்பரில் சிறகடித்துக் கிளம்ப இருக்கிறது 'பற’. வானமே எல்லை!

இன்பாக்ஸ்

•  அப்பாடா! ஒரு வழியாக பார்பி டால் ஜெனிலியா, ரித்தேஷ§டனான காதலை உறுதிப்படுத்தி இருக்கிறார். இருவரின் காதலுக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த விலாஸ்ராவ் தேஷ்முக், தற்போது மனம் இரங்கி, பச்சைக் கொடி காட்டி இருக்கிறார். சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன ஜோடி, இப்போது அதீத உற்சாகத்தில் இரண்டு படங்களில் இணைந்து நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்களாம். அடுத்த ஆண்டு திருமணம் நடக்கலாம் என்கிறார்கள். 'பாய்ஸ்’ பொண்ணுக்குப் பையன் சிக்கிட்டான்!

இன்பாக்ஸ்

• லாரா தத்தா வீட்ல விசேஷங்க! இன்னும் ஏழு மாதத்தில் ஆராரோ ஆரிரரோ பாட இருக்கும் லாரா, குழந்தை பிறக்கும் வரை நடிப்புக்கு 'நோ’ சொல்லியிருக்கிறார். லாராவின் முகப் பூரிப்புக்குக் காரணம், பெண் குழந்தைதான் என்று வீட்டுக்கு வருபவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுகிறாராம் கணவர் மகேஷ் பூபதி. லாரா வீட்டுக்கு நிலா வரப் போகுது... நிலா வரப் போகுது!

• தன் ரசிகர்களுக்கு 'டிஸையர்’ படம் மூலம் ஷாக் கொடுக்க இருக்கிறார் ஷில்பா ஷெட்டி. இந்தியா-சீனா இரண்டு நாடுகளிலும் வெளியாக இருக்கும் இந்த ஆங்கிலப் படத்தில் மொட்டைத் தலை கெட்டப்பில் வருகிறார் ஷில்பா ஷெட்டி. 'கதை என்ன?’ என்று விசாரித்தால், ''ரெண்டு நாடு சம்பந்தப்பட்ட கதை. அதுக்கு மேல எல்லாமே சீக்ரெட்'' என்கிறார் ஷில்பா ஷெட்டி. மொட்டையா சொன்னா எப்படி?  

• சர்ச்சை நாயகி ராக்கி ஷாவந்த்தின் அடுத்த அதிர்ச்சி வைத்தியம் ரெடி. ஒரு பேட்டியில், ''முன்னழகுக்காக சிலிக்கான் ஆபரேஷன் செய்துகொண்டேன். உங்களை வசியம் செய்த விஷயம் எனக்கு வலி கொடுத்தது. நிறைய இரவுகள் வலியினால் தூங்காமல் அழுதிருக்கிறேன். யாரும் சிலிக்கான் ஆபரேஷன் செய்துகொள்ளாதீர்கள்!'' என்று உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். கவர்ச்சிக்குப் பின்னால் கண்ணீர்!

இன்பாக்ஸ்

•  'ஃபா’ பட இயக்குநர் பால்கியின் மனைவி கௌரி ஷிண்டே 'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தை இயக்குகிறார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் படத்தில் மீண்டும் ஸ்ரீதேவியுடன் நடிக்கிறார் அமிதாப் பச்சன். கணவ னைக் கவர்வதற்காக வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்கும் பெண்ணின் தகிடுதத்தங்கள்தான் படத்தின் கதை. பால்கி, ஸ்ரீதேவியின் நட்புக்காக அமிதாப் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். நட்புக்கு மரியாதை!

இன்பாக்ஸ்

•  கடைசியாக சாம்பியன் பட்டம் வென்றது மூன்று வருடங்களுக்கு முன். இருப்பினும் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகளின் போர்ஃப்ஸ் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தைத் தொடர்ந்து ஏழாவது ஆண்டாகத் தக்கவைத்து இருக்கிறார் மரியா ஷரபோவா. விளம்பர வருமானங்கள் தான் ஷரபோவாவின் சாதனைக்குக் காரணம். டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி இரண்டாம் இடம், கார் ரேஸ் வீராங்கனை டேனிகா பேட்ரிக் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். டாப் 10 பட்டியலில் ஏழு பேர் டென்னிஸ் வீராங்கனைகள். 'லவ் ஆல்’ கேர்ள்ஸ்!

இன்பாக்ஸ்

•  இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இந்தியன் ரேஸிங் லீக் ஆரம்பமாக இருக்கிறது. நரேன் கார்த்திகேயன், கரூண் சந்தோக் மட்டுமல்லாமல், உலகின் முன்னணி கார் ரேஸர்களையும் அழைத்து வந்து, இந்தியாவில் ரேஸ் நடத்தும் திட்டம். இந்த ரேஸிங் லீக்கில் சச்சின் டெண்டுல்கரும் ஒரு ரேஸிங் அணியை வாங்க இருக்கிறாராம். டாப் கியர் தட்டு தலைவா!