Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மர்மமான முறையில் வீட்டில் இறந்துக்கிடந்த நடிகை!

மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரித்திகா செளத்திரி. இந்தி சீரியல் மற்றும் மாடலிங் செய்துவந்த இவர், கங்கானா ரனாவத் நடித்த 'ரஜ்ஜோ' என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தநிலையில் வீட்டில்அழுகிய நிலையில் கிரித்திகாவின் சடலம்  நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

kiritika choudhary


இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ் வந்து, இரண்டு மூன்று நாள்களாக மூடியிருந்த வீட்டை உடைத்துப் பார்த்தபோது, இவர் ஓர் ஏசி அறையில் அழுகிய நிலையில்  கிடந்துள்ளார். பிறகு, இவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவர் இறந்து மூன்று நாள்கள் இருக்கலாம் எனப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர் ஏசி அறையில் இருந்ததால், துர்நாற்றம் எளிதாக வெளியே செல்லவில்லை. இவர் கொலைசெய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா என்பது தெரியவில்லை. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement