அக்‌ஷய் குமார் பட ட்ரெய்லரைப் பாராட்டிய மோடி..! | Modi praises Akshay Kumar's movie trailor

வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (13/06/2017)

கடைசி தொடர்பு:20:16 (13/06/2017)

அக்‌ஷய் குமார் பட ட்ரெய்லரைப் பாராட்டிய மோடி..!

இந்தியில் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமாரின் நடிப்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளிவர இருக்கும் படம், 'டாய்லெட்: ஏக் பிரேம் கதா'. 

 


ஶ்ரீ நாராயணா சிங் இயக்கியுள்ள இந்தப் படம், மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரின் லைக்ஸைப் பெற்ற நிலையில், இந்த ட்ரெய்லரை தற்போது மோடியும் பார்த்துள்ளார். இதைப் பார்த்த மோடி தன் ட்விட்டரில், 'தூய்மை இந்தியாவுக்காக நல்ல முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். தூய்மை இந்தியா திட்டத்துக்காக, 125 கோடி இந்தியர்களும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்ற வேண்டும்' என்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு, அக்‌ஷய் குமார் ட்விட்டரில் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, 'மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close