Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விஸ்வரூபம்-2' ட்ரெய்லர் எப்போ? கமல் ட்வீட்!

2013 ஆம் ஆண்டு, கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான 'விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

Kamal Haasan


இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டிய 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம், இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என கமல் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. கமல், இந்திய தேசியக்கொடியைத் தனது இதயத்தில் தாங்குவதுபோல வெளியிடப்பட்டிருந்த அந்த போஸ்டர் வைரல் ஆனது.

 


இந்நிலையில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் வெளியானதாக வரும் தகவல் உண்மை இல்லை. ட்ரெய்லரை வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான இந்தி உரிமையும் எங்களிடம்தான் உள்ளது" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close