வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (14/06/2017)

கடைசி தொடர்பு:16:28 (14/06/2017)

நடனத்தில் சிம்பு செய்த சாதனை!

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. மூன்று கதாநாயகிகளுடன் சிம்பு நடிக்கும் இந்தப் படம் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளிவரயிருக்கிறது.

simbu


சிம்புவின் எந்தப் படத்திலும் நடக்காத பல விஷயங்கள் இந்தப் படத்தில் நடந்து வருகிறது. சிம்புவின் இன்ட்ரோ பாடலை முதன் முதலில் வைரமுத்து எழுதியது, சிம்புவுக்காக கானா பாடலை பாடிய இளையராஜா, இரண்டு பாகமாக வெளிவரயிருக்கும் முதல் சிம்பு படம் எனப் பல புதிய விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன .இது எல்லாம் பத்தாது என சிம்பு இந்தப் படத்துக்காக மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.  ட்ரிப்பிள் ஏ படத்தில் 'ரத்தம் என் ரத்தம்' என்ற பாடலில் சிம்பு தரையில் கால் வைக்காமலேயே ஆடியுள்ளாராம். இந்தியாவிலேயே இப்படி ஒரு நடனத்தை யாரும் இதுவரை ஆடியது இல்லையாம். இதன் மூலம் நடனத்தில் சாதனை செய்துள்ளார் சிம்பு.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க