வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (14/06/2017)

கடைசி தொடர்பு:19:42 (14/06/2017)

வதந்திகளை நம்ப வேண்டாம்... கமல் ட்வீட்!

பல சர்ச்சைகளுக்கு இடையே கமலின் விஸ்வரூபம்  திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. 'விஸ்வரூபம்' எடுத்தபோதே அதன் இரண்டாம் பாகத்திற்கான பாதி படப்பிடிப்பை கமல் நிறைவு செய்திருந்த நிலையில் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 'விஸ்வரூபம் 2' படப்பிடிப்பு நிறைவு செய்ய முடியாமல் பாதியிலேயே நின்றது.

kamal

அதனால்  'விஸ்வரூபம் 2' படத்தை கமல் தன் சொந்த தயாரிப்பில் உருவாக்கி வருகிறார். சிறிது நாள்களுக்கு முன்புதான் 'விஸ்வரூபம் 2'  படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது.  இந்நிலையில்  'விஸ்வரூபம் 2'  படத்தின் டீசர் ரம்ஜான் ஸ்பெஷலாகவும், படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகும்  என்பது போன்ற செய்திகள் வந்தன. 

தற்போது இது பற்றி கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 'விஸ்வரூபம் 2' படத்தைப் பற்றி வந்த செய்திகள் வதந்தி எனவும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது பற்றி ராஜ்கமல் ஃபிலிம் தயாரிப்பு நிறுவனம்அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கும் என்றும் படத்தின் இந்தி உரிமையும் தங்கள் நிறுவனமே வாங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க