Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் பார்வைகள்: வைரலாகும் 'விவேகம்' சாங் டீசர்

அஜித் நடித்து 'சிறுத்தை' சிவா இயக்கும் 'விவேகம்' படத்தின் சிங்கிள் ட்ராக் டீசர் நள்ளிரவு 12.01-க்கு வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்தில், 2 லட்சம் வியூக்களைத் தாண்டியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இசை உரிமையை வாங்கிய சோனி நிறுவனம், இந்த சிங்கிள் ட்ராக் டீசரை வெளியிட முடிவுசெய்தது. அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் இசையமைப்பாளர் அனிருத். 

'சிங்கிள் ட்ராக் டீசர் வெளியாக இருக்கிறது' என்ற செய்தி வெளியானதிலிருந்தே அதற்காகக் காத்திருந்த ரசிகர்கள், டீசரைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இந்த சாங் டீசர், தமிழ், ஆங்கில வார்த்தைகளின் கலவையில் உருவாகியுள்ளது. #Surviva என்ற இந்தப் பாடலை அனிருத் மற்றும் யோகி பி இருவரும் பாடியுள்ளனர். இந்த டீசர், ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement