4 ஹீரோயின்கள், காலா எடிட்டர்..! - துல்கர் சல்மானின் புதிய தமிழ் படம் | New Tamil film of Dulquer Salmaan

வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (17/06/2017)

கடைசி தொடர்பு:20:07 (17/06/2017)

4 ஹீரோயின்கள், காலா எடிட்டர்..! - துல்கர் சல்மானின் புதிய தமிழ் படம்

துல்கர் சல்மான் மல்லுவுட்டில் செம பிஸி. 'ஓகே கண்மணி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டவர். தற்போது அவரை வைத்து மற்றொரு ட்ராவல் படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ர.கார்த்திக். நான்கு நாயகிகள், பயணம் பற்றிய படம் என்று தகவல்கள் வரவே இயக்குநரிடம் அது பற்றிக் கேட்டோம். 'நீங்கள் கேள்விப்பட்ட எல்லாமே உண்மைதான். ஆனால், படத்தில் நடிக்கப்போகும் அந்த நான்கு கதாநாயகிகள் பற்றி தற்போது எதுவும் கூறமுடியாது.

சார்லி

டிசம்பரில் பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் கதையை எழுதும்போதே துல்கர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துதான் எழுதினேன். இந்தப் படம்  தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிறது என பல செய்திகள் வருகின்றன. ஆனால், நான் இதை தமிழில் மட்டும்தான் இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்தப் படத்தை மலையாளத்தில் எடுக்கும் எண்ணம் இல்லை. 

துல்கர் சல்மான்


அதே போல் துல்கர் சல்மானே படத்தில் நடிக்க ஒப்பந்தமானது மகிழ்ச்சியாக உள்ளது. டிசம்பர் மாதத்தில் வானிலை மாறும் என்பதால் அந்த நேரத்தில் ஷூட்டிங் வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து ஷூட்டிங்கை தள்ளி வைத்துள்ளோம். படத்தில் இசையமைப்பாளராக தீனதயாளன், ஒளிப்பதிவாளராக  ஜார்ஜ் சி வில்லியம்ஸ், எடிட்டராக காலா படத்தின் எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத் என திறமையான டீம் அமைந்திருப்பது மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்துள்ளது' என்று உற்சாகமாக சொன்னவரிடம், இந்தப் படத்தின் கதை மலையாளத்தில் துல்கர் நடித்த 'நீலாகாஷம் பச்சக்கடல் சுவன்ன பூமி' என்ற டிராவல் படத்தின் ரீமேக்கா என்று கேட்டதற்கு, ’கண்டிப்பாக இல்லை’ என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க