Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’சிவாவுக்கு வில்லி சிம்ரன்..!’’ - ரகசியம் சொல்லும் பொன்ராம்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களை இயக்கிய பொன்ராம், சிவகார்த்திகேயனுடன் தனது அடுத்தப் படத்தை தொடங்கியுள்ளார். 'ரஜினி முருகன்' படத்தின் ஆடியோ ரிலீஸில், ’கண்டிப்பாக என் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் இருக்க மாட்டார்’ என்று ஓபன் டாக் கொடுத்தவர், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த ரகசியம் மற்றும் சிம்ரன், நெப்போலியன் கதாபாத்திரம்  பற்றியும் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்பு கொண்டோம். 

simran


பிஸியான ஷூட்டிங்கிற்கு இடையே பேச ஆரம்பித்தவர், 'எங்களிடம் நல்ல புரிதல் இருக்கிறது. அதுதான் மூன்றாவது படத்துக்கும் நாங்கள் இணைய காரணம். என்னுடைய முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்திலும் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால், அதைவிட ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் கவனம் செலுத்தவுள்ளேன். இந்த படத்துக்காகத்தான் சமந்தா சிலம்பம் கற்றுக்கொண்டார். படத்தில் அவருக்கு சிலம்பம் சுற்றுவது போல் காட்சிகள் இருக்கும். அதற்காக சமந்தா அதிகம் மெனக்கெடுகிறார். இந்தப் படத்தில் சிம்ரன் கேரக்டர் பவர்ஃபுல்லாக இருக்கும். சிவகார்த்திகேயனுக்கு அவங்க தான் வில்லி. நெப்போலியன் சிவாவின் தந்தையாக நடிக்கிறார்.
படத்தில் சிவா, சூரி, நெப்போலியன் ஒரு கூட்டணியாகவும், சிம்ரன் மற்றும் மலையாள நடிகர் லால் ஒரு கூட்டணியாகவும் இருப்பார்கள் கண்டிப்பாக இந்த கூட்டணியும் மக்களுக்கு பிடிக்கும்'' என்று உற்சாகமாக முடித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement