வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (19/06/2017)

கடைசி தொடர்பு:09:29 (20/06/2017)

வெளியானது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ட்ரெய்லர்-3!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் 3-வது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை

வித்தியாசமான படங்களை மட்டுமே இயக்கிவரும் செல்வராகவன், தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். புதுப்பேட்டைக்குப் பிறகு, செல்வராகவனுடன் யுவன் ஷங்கர் ராஜா இணைவதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  

இதனிடையே 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் 3-வது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்பே, இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியாகி யூ-டியூப்பில் கலக்கியது. பேய் படமாக உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' வரும் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகிறது. 'காதல் கொண்டேன்', '7 ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட படங்களில் பயணித்த செல்வா-யுவன்-அரவிந்த் கிருஷ்ணா கூட்டணி, இந்தப் படத்தில் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.