வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (21/06/2017)

கடைசி தொடர்பு:15:08 (21/06/2017)

பார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் மைம் கோபி!

'மெட்ராஸ்', ' கபாலி',' பைரவா ' போன்ற படங்களில் நடித்த மைம் கோபி, தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். இவர்  இன்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் 19 பார்வையில்லாத குழந்தைகளை அழைத்துச் செல்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தொடர்புகொண்டோம். 


''நம்ம அனைவரும் பார்வையுடன் இந்த உலகத்தைப் பார்த்து வருகிறோம். ஆனால், பார்வை இல்லாத குழந்தைகள் பார்வை இல்லாமலேயே இந்த உலகத்தைப் பார்த்து வருகிறார்கள். விமானத்தில் பறக்க வேண்டும் என்ற அவர்களுக்குள் இருக்கிற சின்ன ஆசையை நிறைவேற்றலாம்  என்று நானும் என் டாக்டர் நண்பரும் முடிவு பண்ணினோம். பார்வை இல்லாத குழந்தைகளுடன் பேசும்போது அவர்கள் இந்த ஆசையைச் சொன்னார்கள். இந்த முயற்சியில் எங்களுடன் மதுரை ரவுண்ட் டேபிள் 99 பேட்ச் குழுவினரும் சேர்ந்துள்ளனர். 

முதலில் சென்னை டு மதுரை மார்னிங் ஃப்ளைட்டில் போகலாம் என்றுதான் ப்ளான் பண்ணியிருந்தோம். ஆனால், அது கேன்சல் ஆனதால் ஈவினிங் கிளம்புகிறோம். நாளை மாலை திரும்பி வர முடிவு செய்திருக்கிறோம். இந்தக் குழந்தைகள் இதுவரை உணவுகளை ஆர்டர்செய்து சாப்பிட்டதே இல்லை. அதனால், மதுரையில் ஒரு ரெசார்ட்டில் தங்கி குழந்தைகள் ஆர்டர்செய்து உணவுகளைச் சாப்பிடவைத்து, அவர்களுக்கு சின்ன என்டர்டெயின்மென்ட் கொடுத்து, ஒரு திரைப்படத்தை அவர்களின் காதுகளுக்கு விருந்தாக கொடுக்க முடிவு செய்திருக்கிறோம்’’ என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் மைம் கோபி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க