வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (21/06/2017)

கடைசி தொடர்பு:19:26 (21/06/2017)

இளைய தளபதியில் இருந்து தளபதிக்கு மாறிய விஜய்..! - மெர்சல் போஸ்டரில் குறியீடு

தெறி படத்துக்குப் பிறகு, விஜய் - அட்லி இணைந்திருக்கும் அடுத்த படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. நாளை விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலையே விஜய் 61 படத்தின் போஸ்டர் மற்றும் பெயரை வெளியிட்டது படக்குழு

மெர்சல்

இந்தப் படத்துக்கு மெர்சல் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் மற்றுமொரு போஸ்டரை இரவு 12 மணிக்கு வெளியிடவுள்ளனர். எப்போதும் விஜய் படங்களில் இளைய தளபதி விஜய் என்றுதான் போடப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் தளபதி விஜய் என்று போட்டுள்ளனர். எதற்காக இந்தத் திடீர் மாற்றம் என்று தெரியவில்லை. மேலும், படத்தின் போஸ்டரில் விஜய்க்குப் பின்னால் ஜல்லிக்கட்டு காளைகள் நிற்பது போன்றும், படத்தின் பெயர் காளையின் உருவத்தில் இருப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், இது விவசாயிகள் மற்றும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாகவும் இருக்கலாம் என்று தெரிகிறது. சமீபத்தில் விஜய், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.