வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (23/06/2017)

கடைசி தொடர்பு:14:47 (23/06/2017)

'மாம்' திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்..!

குழந்தை நட்சத்திரமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ரஜினி - கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து, தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற முதல் நடிகை எனப் பெயர் வாங்கியவர், ஶ்ரீதேவி. இவர் நடிப்பில், ஜூலை 7-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது, 'மாம்' திரைப்படம்.

sridevi


ஶ்ரீதேவியின் 300-வது படமான 'மாம்' திரைப்படத்தை, ஶ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமாகிய போனி கபூர் தயாரித்துள்ளார். ரவி உடையார் இயக்கியிருக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகயிருக்கிறது. கடந்த மாதம் 'மாம்' படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க