சிம்பு படம் ஆரம்பிக்குமா? சத்யம் தியேட்டரின் உடனடி பதில்!

சிம்பு

சிம்பு மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இன்று வெளியானது. வழக்கம் போலவே பல தடைகளைத் தாண்டித்தான் இந்தப் படம் ரிலீஸாகியுள்ளது. இன்று காலை, ரசிகர்கள் காட்சியும் காலை காட்சியும் ரத்தான நிலையில், மதியக் காட்சியிலிருந்து படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். 

sathyam theatre reply

அதனால், மதியக் காட்சிக்குத் திரையரங்கிற்கு ரசிகர்கள் படையெடுத்தனர். ஆனால், அப்போதும் படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது. அதேபோல, காட்சி தொடங்கவும் தாமதமானது. படம் போடுவார்களா மாட்டார்களா என்கிற சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, சத்யம் தியேட்டரின் கஸ்டமர் கேர் நம்பருக்கு மெசேஜ் அனுப்பினால், 'நிச்சயமாகப் படம் போடுவோம்' என்று உடனே பதில் வந்தது. பதில் வந்த சில நிமிடங்களிலே படமும் போடப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!