எல்லாவிதமான சோதனைகளுக்கும் தயார்! பாவனா விவகாரத்தில் நடிகர் திலீப் குமார் ஆவேசம்

'உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்ட அனைத்து விதமான விசாரணைகளுக்கும் நான் தயாராக உள்ளேன்' என்று மலையாள நடிகர் திலீப் குமார் தெரிவித்துள்ளார். 

தமிழ் மற்றும் மலையாளப் பட நடிகை பாவனா, பிப்ரவரி மாதம் 17-ம் தேதி கொச்சிக்கு காரில் செல்லும்போது கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக ரவுடி பல்சர் சுனில், பாவனாவின் கார் டிரைவர் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த விவகாரம் தொடர்பாக, பிரபல மலையாள நடிகர் திலீப் குமார் பெயரும் அடிபட்டுவந்தது. மேலும், திலீப்பிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக திலீப் குமார் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'நான் எல்லோருக்கும் நன்மை நடக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால், எனக்கிருக்கும் நற்பெயரை அழிக்க,   சமூகவலைதளங்களில் சிலர் செயல்படுகின்றனர். செய்திச் சேனல்களில் ஒளிபரப்பான விவாதங்களும் எனது புகழைக் களங்கப்படுத்தும் விதமாகவே இருந்தது. நான் எல்லா விதமான சோதனைகளுக்கும் தயாராகவே உள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!