'தரமணி' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்... ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்!

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தரமணி' திரைப்படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

taramani

'கற்றது தமிழ்' மற்றும் 'தங்க மீன்கள்' போன்ற யதார்த்தமான திரைப்படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருபவர் ராம். உணர்வுகளை மையப்படுத்தி தனது ஒவ்வொரு படத்தையும் இயக்கிவரும் ராம், அடுத்ததாக வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் 'தரமணி' என்ற படத்தை இயக்கியுள்ளார். 2013-க்கு பிறகு ராமின் படம் வராததால் ஏமாற்றமடைந்துள்ள அவரது ரசிகர்கள், 'தரமணி' படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், 'தரமணி' படத்தின் ரிலீஸ் தேதிகுறித்து, படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார், 'அண்டாவ காணோம்' படத்தின் இசை வெளியீட்டில் பேசியதாவது, " 'தரமணி' படத்துக்கு தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 11-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என்றார். ஆண்-பெண் உறவுகளை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள 'தரமணி' படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அமரர் நா.முத்துக்குமார், படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். 'தரமணி' வெளியாகும் முன், ஆகஸ்டு 10-ம் தேதி அஜித் நடித்துள்ள 'விவேகம்' வெளியாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!