''என் படங்களின் ரிலீஸ் என் கையில் இல்லை'' - கெளதம் கார்த்திக்

ஜூன் 30-ம் தேதி ரிலீஸாகப்போகும் 'இவன் தந்திரன்' படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் கெளதம் கார்த்திக்கை, ரஜினி அரசியல் பிரவேசம் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடித்துக்கொண்டிருக்கும் அனுபவம் எனப் பலதரப்பட்ட கேள்விகளுடன் கெளதமைத் தொடர்புகொண்டோம்.

கெளதம் கார்த்திக்


''இன்ஜினீயரிங் படிக்குற ஒரு பையன் படிப்பைப் பாதியிலேயே விட்டுட்டு தன்னுடைய புத்தியை, கான்டெக்ட், ஃப்ரெண்ட்ஸை யூஸ் பண்ணி ஒரு கடை போடுறான். அவன் வாழ்க்கையில் என்ன கஷ்டமெல்லாம் வருதோ, அதையெல்லாம் அவனுடைய திறமை, புத்தியை யூஸ் பண்ணி எப்படி ஜெயிக்கிறான் என்பதுதான் 'இவன் தந்திரன்.' இதில் ஆர்.ஜே.பாலாஜிகூட நான் நடிச்ச சீன்ஸ் எல்லாம் செம்மையா வந்திருக்கு. யார் கூடவும் நான் இந்த அளவுக்கு என்ஜாய் பண்ணி நடிச்சதில்லை. ஒரு யூத் ஐகான்கூட நடிச்சது ஹாப்பியா இருக்கு. 'இவன் தந்திரன்' படத்தில் காமெடியும் நல்லா வந்திருக்கு. படம் பார்க்குற அப்போ உங்களுக்கே நல்ல ஃபீல் கிடைக்கும். 

இவன் தந்திரன்


விஜய் சேதுபதியோட 'ஒரு நல்லநாள் பாத்துச் சொல்றேன்' படத்துலையும் ஒரு ஜாலியான, காலேஜ் பையனா நடிக்கிறேன். நான் விஜய் சேதுபதியோட பெரிய ஃபேன். ஒரு மனிதரா விஜய் சேதுபதி மேல நிறைய மரியாதை இருக்கு. அவரோடு சேர்ந்து நடிக்கிறதை நான் பிளஸ்ஸாதான் பார்க்குறேன். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிறேன். வளர்ந்து வரும் நடிகனான நான், ஒரு ஹிட்டான ஹீரோ படத்தில் நடிக்கிறதை தப்பான முடிவா நினைக்கலை. 'ஒரு நல்லநாள் பாத்துச் சொல்றேன்' படத்தில் எனக்கு ஜோடியா தெலுங்கு ஹீரோ நாகபாபு பொண்ணு நிகாரிகாதான் நடிக்கிறாங்க.

நான் ஒரு சினிமா ரசிகன். அதனால்தான் நான் ரஜினியை சினிமாவில் மட்டும் பார்க்க விரும்புறேன் என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னேன். நான் அப்படி சொன்னது தப்பானு எனக்குத் தெரியவில்லை'' என்றவரிடம்,  உங்களின் படங்கள் எல்லாம் காலதாமதமாக ரிலீஸாகிறதே என்று கேட்டதற்கு, ‘‘என் படங்களின் ரிலீஸ் என் கையில் இல்லை. படத்தில் நடிக்கிறது, டப்பிங் கொடுக்குறது, புரொமோஷன் கொடுக்குறது இதுதான் என் வேலை. ரிலீஸ் பண்றது தயாரிப்பாளர் வேலை’’ எனப் பளீச்சென்று பதிலளித்தார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!