வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (28/06/2017)

கடைசி தொடர்பு:18:00 (28/06/2017)

2.0 படத்துக்காக லாஸ் ஏஞ்செல்ஸ் பறக்கும் ராட்சச பலூன்..!

எந்திரன் படத்துக்குப் பிறகு, ஷங்கர்-ரஜினி இணைந்திருக்கும் 2.0 திரைப்படம், அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகயுள்ளது. இந்தப் படத்தில் எமி மற்றும் அக்‌ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


15 மொழிகளில் வெளியாகப்போகும் இந்தப் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் லைக்கா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன் முதல் முயற்சியாக, ரஜினி - அக்‌ஷய் குமாரின் புகைப்படங்கள் பிரின்ட் செய்யப்பட்ட ஹாட் ஏர் பலூன்கள் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் பறக்கவிடப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஓர் இந்திய படத்தை விளம்பரம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

மேலும், இந்த ராட்சச பலூனை லண்டன், துபாய், இந்தியா என உலகம் முழுக்க பறக்க விடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதை லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க