வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (29/06/2017)

கடைசி தொடர்பு:21:47 (29/06/2017)

''சதுரங்க வேட்டை 2' படத்தை இயக்காததுக்கு இதுதான் காரணம்’ : இயக்குநர் வினோத்

தீரன் திருமாறனாக கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. சிறுத்தை படத்துக்கு பிறகு, கார்த்தியை இந்தப் படத்துக்காக காக்கிச்சட்டை போட வைத்திருக்கும் இயக்குநர் வினோத்தைப் படத்தின் அப்டேட்ஸ்க்காக தொடர்புகொண்டேன். திரைப்படம் குறித்து இயக்குநர் பேசுகையில்..

 ''சதுரங்க வேட்டை' படத்துக்குப் பிறகு, கார்த்தியை வைத்து நான் இயக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளிவரப்போகிறது. அதனால் அதன் பிறகு, இந்தப் படத்தைப் பற்றி சொல்கிறேன்' என்றவரிடம்,

தீரன் அதிகாரம் ஒன்று

'சதுரங்க வேட்டை' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்காததன் காரணத்தைக் கேட்டால், ''சதுரங்க வேட்டை 2' படத்தின்  கதையை நான்தான் எழுதினேன். 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கமிட் ஆன காரணத்தால்தான் என்னால் 'சதுரங்க வேட்டை 2'  படத்தை இயக்க முடியாமல் போனது'' என்றார். 

 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகப்போகும் ஜூன் 30-ம் தேதிதான் 'சதுரங்க வேட்டை 2' படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட படநிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க