வெளியிடப்பட்ட நேரம்: 03:21 (30/06/2017)

கடைசி தொடர்பு:07:57 (30/06/2017)

ஆஸ்கர் விருது குழுவில் இணைய இந்திய நடிகர்களுக்கு அழைப்பு!

ஆஸ்கர் விருது ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய, இந்திய நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான், சல்மான் கான் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்கர் விருது

உலக அளவில் சிறந்த படங்களுக்கு, ஒவ்வொரு வருடமும் 'அகாடமி அவார்ட்ஸ்' என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படு கின்றன. சினிமா விருதுகளில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது போற்றப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினர்கள் சேர்க்கையில் பன்முகத்தன்மை இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுவந்தது. இதையடுத்து, புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஆஸ்கர் நிர்வாகக் குழு.

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான், சல்மான் கான், இர்ஃபான் கான் ஆகியோருக்கும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட்  இயக்குநர்கள் மிருணாள் சென், கௌதம் கோஷ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காஸ்ட்யூம் டிசைனர் அர்ஜுன் பாசின், ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன், 'கபாலி' படத்தில் சவுண்ட் டிசைனராகப் பணியாற்றிய அம்ரித் பிரீத்தம் தத்தா ஆகியோரும் ஆஸ்கர் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய அழைக்கப்பட்டுள்ளனர்.