வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (30/06/2017)

கடைசி தொடர்பு:16:08 (30/06/2017)

தமிழுக்கும் ஜூலியானாவுக்கும் என்ன சம்பந்தம்?' - பிக் பாஸுக்கு எதிராகச் சீறும் அர்ஜூன் சம்பத் #BiggBossTamil

விஜய் டிவி-யின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிதான் சமூக வலைதளங்களில் தற்போதைய ஹாட் டாபிக்... மீம் கிரியேட்டர்ஸூக்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சி நல்ல தீனியாகவே உள்ளது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருக்கும் 15 பிரபலங்களில்,  உடல்நலக் குறைவு காரணமாக நேற்றைய நிகழ்ச்சியிலிருந்து நடிகர் ஶ்ரீ வெளியேறினார் இப்போது. இந்த நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போவதாக, 'இந்து மக்கள் கட்சி' அறிவித்துள்ளது. 

பிக் பாஸ்எந்தக் காரணத்துக்காக இந்தப் போராட்டைத்தை நடத்துகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். " 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தமிழகத்தின் பண்பாட்டுக்கு உகந்த  நிகழ்ச்சியல்ல. முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்தோடும் தனியார் தொலைக்காட்சியின் டி.ஆர்.பியை அதிகப்படுத்தும் உள்நோக்கத்தோடும்தான், இந்தக் கலாசாரச் சீரழிவு நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்துகிறது. வெளிநாடுகளில் வேண்டுமானால் இந்த நிகழ்ச்சி பொருத்தமானதாக இருக்கலாம்

அர்ஜூன் சம்பத்


போட்டியாளர்களில் ஒருவரான ஜூலியானா, மெரினாவில் மோடி, சசிகலா, பன்னீர்செல்வத்துக்கு எதிராக அருவருக்கத்தக்க வகையில் கோஷம் எழுப்பினார். ஜூலியானாவை ஒரு தமிழ்ப் பெண் என்று அறிமுகப்படுத்துவதைவிட  முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழுக்கும் ஜூலியானாவுக்கும் என்ன சம்பந்தம்? ஜல்லிக்கட்டுக்கும் ஜூலியானாவுக்கும் என்ன சம்பந்தம்? ஜல்லிக்கட்டு போராட்டம் தடியடியில் முடிஞ்சதுக்கும் ஜூலியானா மாதிரியான ஆட்கள்தான் காரணம். பொதுவாக, கமல்ஹாசனுக்கு நம் இந்தியப் பாரம்பர்யம், கலாசாரம் மீது நம்பிக்கை கிடையாது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கக்கூடிய தயாரிப்பாளர்களில் நிறைய கிறிஸ்துவர்களும் நக்சலைட் மனோபாவம் உடையவர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். எனவே, இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும்'' என்றவரிடம்,

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலாசார சீரழிவாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?

''  ஜூலியானா மாதிரி ஒரு வயசுப் பிள்ளை, ஒரு வயசுப் பையன்கிட்ட பேசுது. இதெல்லாம் அருவருக்கத்தக்க ஒரு விஷயம். இதையெல்லாம் காசாக்கப்பார்க்கிறாங்க. இன்னும் போகப்போக எப்படிப் போகப்போவுதுனு தெரியலை. 

big boss

தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்க, ஜூலியானா போன்றவர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபட்டு, மேற்கத்திய நாகரிகத்தை தமிழ் மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். அதனால்தான், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை எதிர்க்கிறோம்'

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் மற்றும் அதிமுகவை சேர்ந்த ஆர்த்தி, வையாபுரி, கஞ்சா கருப்பு எல்லாம் இருக்காங்களே அவர்களை ஏன் எதிர்க்கவில்லை'?

இவர்கள் அனைவரும் நடிகர்கள், நடிகைகள், வர்த்தக அடிப்படையில்தான் அவர்கள் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக கால்ஷீட் கொடுத்து இருக்காங்க. அவர்கள் எந்த கட்சியில்  வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்களுக்கு பிரச்னையில்லை. இந்த நிகழ்ச்சியில் ஜூலியானா இருக்க வேண்டிய அவசியம் என்ன? ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அருவருப்பான வசனங்களை பேசி அசிங்கம் பண்ணுனாங்க அவங்க. ஜூலியானாவை நிகழ்ச்சியில்  ப்ரொமோட் பண்ண வேண்டிய அவசியம் என்ன? என்று காரசாரமாக முடித்தார் அர்ஜூன் சம்பத். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க