Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திங்கள்கிழமை முதல் படக்காட்சிகள் ரத்து..! - அபிராமி ராமநாதன்

ஜிஎஸ்டி வரியை எதிர்த்து திங்கள்கிழமை முதல் திரையரங்குகளில் அனைத்து திரைப்படக் காட்சிகளும் ரத்து செய்யப்படவுள்ளது. இது பற்றிய அறிவிப்பைத் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் சென்னையில் தெரிவித்துள்ளார்.

தியேட்டர்

அவர் பேசுகையில், ''புதுச்சேரி திரையரங்குகளில் புதிய சினிமா டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து தெளிவான விளக்கத்தை அரசு எங்களுக்கு அளிக்கவில்லை. திரையரங்குகளில் சினிமா டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி குறித்து தெளிவு இல்லை. அரசாங்கத்திடம் எங்கள் கோரிக்கையை வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படியிருந்தும் இந்த மாதிரி வரிகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. நலிந்துகொண்டிருக்கும் எங்கள் தொழிலைக் காப்பாற்றுங்கள், இல்லையென்றால் செத்துவிடும் அபாயம் இருக்கிறது. எங்கள் தொழிலை நம்பி 10 லட்சம் குடும்பங்கள் உள்ளன. அதனால், அரசிடம் எங்கள் கோரிக்கையை முன் வைக்கிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் திங்கள்கிழமை முதல் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்வோம்’’ என்று கூறியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close