வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (03/07/2017)

கடைசி தொடர்பு:18:43 (03/07/2017)

தமிழ் படத்தில் மஞ்சு வாரியர்..!

'ஈரம்', 'வல்லினம்', 'ஆறாது சினம்', 'குற்றம் 23' என தனது எல்லாப் படங்களிலும் வித்தியாசமான கதையை முன்னிறுத்தி படம் எடுத்திருப்பவர் இயக்குநர் அறிவழகன். அருண்விஜய்யை வைத்து இவர் எடுத்த 'குற்றம் 23' திரைப்படம் இருவருக்கும்  நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. 
தற்போது அறிவழகன், மலையாள நடிகை மஞ்சு வாரியரை வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது,

மஞ்சு வாரியர்

'' நான் இயக்கப்போகும் படத்தில் மஞ்சு வாரியர்  நடிக்கிறார் என்பது உண்மைதான். நான் சொன்ன கதை மஞ்சு வாரியருக்குப் பிடித்துவிட்டது. அவர் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். பெண்களை மையமாகக்கொண்ட கதைதான் இந்தப் படம். அதற்காக இந்தப் படம் பெண்ணாதிக்கம் சார்ந்த படமாக இருக்காது. படத்தின் கதை ஆண்களுக்கும் கட்டாயம் பிடிக்கும்.  ஆக்‌ஷன் த்ரில்லர்தான் இந்தப் படத்தின் ஜானர்.  மஞ்சு வாரியருக்கும் படத்தில் ஆக்‌ஷன் சீன்ஸ் இருக்கும். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க