''10 கோடி ரூபாய் கொடுத்தாலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டேன்..!’’ - லட்சுமி ராமகிருஷ்ணன்

இர்ஃபான் கான் நடிப்பில் இந்தியில் வெளியான திரைப்படம், 'இந்தி மீடியம்'. இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை,  நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழில் ரீமேக் செய்வதாகக் கேள்விப்பட்டு, அதுபற்றி அவரிடம் கேட்டோம். 

லட்சுமி ராமகிருஷ்ணன்

''இந்தி மீடியத்தைத் தமிழில் எடுக்கலாம் என்று, நான் படத்தின் தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டேன். அவர்களும் தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார்கள். அந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் 'இந்தி மீடியம்' திரைப்படம் மலையாளம் மற்றும் பெங்காலி படத்தின் தழுவல்தான் என்று பேசப்பட்டது. அதுனால், எதற்கு வம்பு என்று நான் விட்டுவிட்டேன்.

ஆனால், 'இந்தி மீடியம்' படம், எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால், அதை அடிப்படையாக வைத்து நான் வேறு ஒரு கதை எழுதினேன். அந்தப் படத்தைத்தான் நான் அடுத்து இயக்கவிருக்கிறேன். 

படத்துக்கு, 'ஹவுஸ் ஓனர்' என்று பெயர்கூட வைத்துவிட்டேன். இந்தப் படத்தில், அசோக்செல்வன் நடிக்க உள்ளார். மஞ்சிமா மோகன், நந்திதா ஸ்வேதா  மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என மூன்று பேரில் யாராவது ஒருவரை நடிக்கவைக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். அதிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தால் ரொம்ப நல்லாயிருக்கும்’’ என்றவரிடம், 

லட்சுமி ராமகிருஷ்ணன்


'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிக்க அழைப்பு வந்தால் சென்றிருப்பீர்களா..?’ என்றதற்கு, ”வந்ததே, என்னைக் கூப்பிட்டார்கள்! நான் என் குடும்பத்தை விட்டுவிட்டு எப்படிப் போவேன்..? நீங்கள் 10 கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் என் வீட்டை விட்டுட்டு இருக்க மாட்டேன். நான் ஒரு வீட்டுப் பறவை. இப்ப நான் ஒரு ஸ்க்ரிப்ட் செய்துகொண்டிருக்கிறேன். படங்களில் எல்லாம் கமிட் ஆகியிருக்கேன். ஒருவரை அழைப்பதற்கு முன்னாடி பேக்ரவுண்ட் செக் செய்து  கூப்பிட மாட்டீங்களா... என்றுதான் கேட்டேன். 'நீங்கள் 10 கோடி கொடுத்தாலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன்' என்று கூறிவிட்டேன். ஆனா, நான் கமலின் தீவிர ரசிகை’’ என்றார் சின்னப் புன்னகையுடன்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!