'செட்டுக்குள்ள பேய் வரல, யானை வந்துச்சு..!' - திகில் அனுபவம் சொல்கிறார் `பலூன்' இயக்குநர் | Thriller experience says 'Balloon' director

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (06/07/2017)

கடைசி தொடர்பு:17:43 (06/07/2017)

'செட்டுக்குள்ள பேய் வரல, யானை வந்துச்சு..!' - திகில் அனுபவம் சொல்கிறார் `பலூன்' இயக்குநர்

ஜெய், அஞ்சலி நடித்துள்ள 'பலூன்'  திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் லைக்ஸை வாங்கியது. தனது முதல் படத்தையே ஹாரர் மூவியாக இயக்கியிருக்கிறார் சினிஸ். முதல் படத்திலேயே பேயை படமாக்கிய காரணத்தைத் தெரிந்துகொள்ள இயக்குநரிடம் பேசினோம்.

ballon movie

''முதல் படத்தில் ஹாரரைக் கொண்டுவந்தது ஏன் என்று பலரும் என்னிடம் கேட்குறாங்க. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்கிட்ட ஹரார் கதை கேட்டார். அதற்காக நான் எழுதிய ஸ்க்ரிப்ட்தான் இந்த 'பலூன்' திரைப்படம். பதினைந்து நாளில் இந்தப் படத்துக்கான கதை எனக்குள்ளே தோன்றியது. 

ballon movie

ஜெய், அஞ்சலி, தவிர ஜனனி அய்யரும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்காங்க. படத்தோட ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் அவருக்கான சீன்ஸ் இருக்கும். இந்தப் படத்தின் டீசரில் ஜனனி அய்யரைக் காட்டியிருக்க மாட்டோம். ஆனால், படத்தோட ட்ரெய்லரில் ஜனனி வந்து மிரட்டுவாங்க. இந்தப் படத்துக்கு யுவனை இசையமைப்பாளராக கமிட் பண்ணலாம்னு புரொடியூசர் என்கிட்ட சொன்னார். 'நான் உடனே யுவன் சாரா, வேண்டாம்’னு சொன்னேன். பெரிய லெஜெண்ட் கூட வேலைப்பார்க்கும்போது, அவர்கிட்ட எப்படி எனக்கு இந்த ட்யூன் வேணும்னு கேட்டு வாங்குறது கொஞ்சம் பயம் இருந்தது. ஆனா, அந்தப் பயம் அவருடன் வேலைப் பார்த்தபோது காணாமல் போய்விட்டது. அவர் படத்துக்கு மட்டும் இல்லை எனக்கும் மிகப்பெரிய சப்போர்ட்டாக  இருந்தார். படத்துக்கு செட் போட்டு ஷூட் பண்ணும்போது, இரவு நேரங்களில் திடீரென்று யானைகள் எல்லாம் வந்து கார்களை நாசம் செய்துவிட்டு சென்றுவிடும். அதனால், படப்பிடிப்பு நடந்தபோது யானைகளைப் பார்த்து பயந்ததுதான் அதிகம். பேய் எல்லாம் எங்க செட்டுக்குள்ள வரலை. ஏன்னா நாங்களே பெரிய பேய்கள்தான்'' என்று கலகலப்புடன் முடித்தார் சினிஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க