இன்பாக்ஸ்
• கொடூரமான இன அழிப்பு யுத்தத்தை நடத்தி முடித்த இலங்கை அரசு, இப்போது நாட்டின் வருவாயை அதிகரிக்க விதவிதமான வியூகங்கள் வகுத்து வருகிறது. போர்க் காலத்தில் பிரபாகரன் முல்லைத் தீவில் தங்கியிருந்த வீட்டை சுற்றுலாத் தலமாக்குவது அதில் முக்கியமான ஐடியா. முக்கால்வாசி சிதைந்த நிலையில் இருக்கும் அந்த வீட்டின் அடியில் நிறைய பதுங்குக் குழிகள் இருக்கின்றன வாம். அதைப் புதுப்பித்துக் காட்சிக்கு வைக்க இருக்கிறார்களாம். 'புலி’ உலவிய வனமடா!

• இன்றைய தேதிக்கு இந்தியாவின் காஸ்ட்லி நடிகை கரீனா கபூர்தான். ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்த 'ஹீரோயின்’ படத்தில் இப்போது

8 கோடி சம்பளத்துக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் கரீனா. பத்து விரல்களைக் காட்டியவரிடம், கெஞ்சிக் கொஞ்சி எட்டுக்கு முடித்தார்களாம். ஹிட்டானா எல்லாமே துட்டு!
• அடுத்தடுத்த அதிரடிகளால் கேரளாவைக் கலக்குகிறார் முதல்வர் உம்மன் சாண்டி. ஏற்கெனவே முதல்வர் அறையில் கேமரா வைத்து, அங்கே நடப்பவற்றை அரசு இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப உத்தரவிட்டவர், இப்போது தான் செல்லும் வாகனம் சாலை விதிகளை மீறினால் போலீஸார் தைரியமாக நடவடிக்கை எடுக்கலாம் என அறிவித்திருக்கிறார். இப்படியும் ஒருவர்!

##~## |
• இலியானாவும் ஆண்ட்ரியாவும் இப்போ செம தோஸ்த். இவர்களில் நட்புக்குக் காரணம் 'நண்பன்’! விஜய் நடிக்கும் நண்பன் படத்தில் இலியானாதான் அவருக்கு ஜோடி. அவருக்கு டப்பிங் பேசுவது ஆண்ட்ரியா. படப்பிடிப்போடு ஒரு பக்கம் டப்பிங் வேலைகளும் நடப்பதால் 'உங்க ஆக்டிங் சூப்பர்’, 'உங்க வாய்ஸ்தான் சூப்பர்’ என மாறி மாறி பாசமழை பொழிந்துகொண்ட வர்கள் இப்போ தோழிகள் ஆகிவிட்டார்கள். ஜாலி கோழிகள்!
• 'ஒசாமாவுக்கு ரகசியச் செய்தி கொண்டு வரும் கூரியர் ஆளைக் கண்காணித்து, அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தோம்’ என அமெரிக்கா அள்ளிவிட்டது எல்லாம் கப்சாவாம். 'ஒசாமா தலைக்கு அமெரிக்கா அறிவித்த 120 கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு, பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரி ஒருவர் ஒசாமாவின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார்’ என்று தன் பிளாக்கில் எழுதியுள்ளார் அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வாளர் ஹில்ஹவுஸ். இதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் காக்கிறது அமெரிக்க ராணுவம். ஹூ இஸ் த பிளாக் ஷீப்?
• முதலில் 'மாலை நேரத்து மயக்கம்’ பிறகு 'மறவன்’ அடுத்து 'இரண்டாம் உலகம்’ என தனுஷை வைத்து இயக்கும் படத்தின் பெயரை மாற்றிக்கொண்டே போன செல்வ ராகவன், இப்போது இன்னொரு புது டைட்டிலை நீட்டுகிறார். 'மயக்கம் என்ன?’ அதையேதான் நாங்களும் கேக்குறோம்!

• லூஸுப் பெண் பிரிட்னி ஸ்பியர்ஸின் புது ரகளை மொபைல் ஃபோபியா. சமீபமாக செல்போனில் க்ளிக்கிய அவரது ஏடாகூடப் படங்களை அவரே எம்.எம்.எஸ். பண்ணத் துவங்கி இருக்கிறார். பிரிட்னியோடு சண்டை போட்டு விலகிய அவரது முன்னாள் பாது காவலர் பெர்னாண்டோ, 'நிர்வாணப் படங் களை அனுப்பி வெறுப்பேற்றுகிறார்’ என்று வெறுப்பில் புகார் கொடுத்து இருக்கிறார். பொழைக்கத் தெரியாத ஆளா இருக்காரே!

• 'தமிழன்’ படத்துக்குப் பிறகு, மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேருகிறார் பிரியங்கா சோப்ரா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் கதை கேட்காமலேயே நடிக்க ஓ.கே. சொல்லி இருக்கிறார் பிரியங்கா. மக்கள் இயக்கத்துல பிடிச்சுப் போடுங்க பாஸு!

• உலகின் டாப் ஃபேஷன் பத்திரிகைகளான எல்லி, எஃப்.ஹெச்.எம், மேக்ஸிம் மூன்றுமே இந்த ஆண்டின் ஹாட் நாயகியாகத் தேர்ந்தெடுத்திருப்பது ஒரே பெண்ணை! அவர் லண்டன் அழகி ரோஸி ஹன்டிங்க்டன். ''பள்ளியில் படிக்கும்போது என் உதடுகள் பெரிதாக இருக்கின்றன என்று பலரும் கிண்டல் செய்வார்கள். ஆனால், அந்த உதடுகள்தான் இன்று என்னை அழகி ஆக்கியிருக்கிறது!'' என்கிறார் இதழ்களை ஈரப்படுத்திக்கொண்டே. அது லிப்ஸ் இல்ல டிப்ஸ்!
• ஓய்வில் இருக்கும் 'இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி, இப்போது தன்னுடைய சுய சரிதையை எழுதும் முயற்சி யில் இருக்கிறார். 100 சதவிகிதம் உண்மையான தகவல் களுடன் சுவாரஸ்யமாகத் தயாராகிறதாம் புத்தகம். சாரை புத்தகம் எழுதச் சொல்லித் தூண்டியவர் திருமதி சுதா நாராயணமூர்த்தி. இப்பவே 'புக்’ பண்ணிடுறோம்!

• இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் நங்கூரமாக நிலைத்து நின்று 294 ரன்கள் குவித்து ருத்ரதாண்டவம் ஆடிய இங்கிலாந்து அணியின் அலைஸ்டர் குக் பிரமாதமான சாக்ஸஃபோன் கலைஞர். கேன்சர் விழிப்பு உணர்வுப் பிரசாரத்துக்கு ஆண்டர்சன், ஸ்டூவர்ட் ப்ராட் போன்ற சக அணியினருடன் இணைந்து நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தியவர். ரொம்ப நல்ல மனசுக்காரய்ங்களோ!

• டோலிவுட் டாப் ஸ்டார்கள் வெங்க டேஷ§ம், மகேஷ் பாபுவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஓ.கே. சொல்லி இருக்கிறார்கள். வெங்கடேஷின் சொந்த பேனரில் தயாராகும் இந்தப் படத்துக்கு இப்போதே எகிறிக்கிடக்கிறது எதிர்பார்ப்பு. இப்படித்தான் எல்லாம் ஆரம்பிக்கும்!