வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (07/07/2017)

கடைசி தொடர்பு:19:12 (07/07/2017)

அடுத்த படத்துக்கு ரெடியான விஜய் மில்டன்!

ஒளிப்பதிவாளராகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான விஜய் மில்டன் இதுவரை 'கோலி சோடா' ,' 10 எண்றதுக்குள்ள', 'கடுகு'  படங்களை இயக்கி தன்னை இயக்குநராகவும் நிலைநிறுத்திக்கொண்டார். இதில் சின்ன பசங்களை வைத்து இவர் எடுத்த 'கோலி சோடா'  பெரும் வெற்றியைக் கொடுத்தது. 

vijay milton


பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் விக்ரம் நடிப்பில் வெளியான  '10 எண்றதுக்குள்ள'  திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்தாக நடிகர் பரத்தை வைத்து எடுத்த 'கடுகு' திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
இந்நிலையில், விஜய் மில்டன் தனது அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதை, கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறது. படத்தின் அப்டேட்ஸ்காக விஜய் மில்டனிடம் பேசியபோது. ''வரும் 10-ம் தேதியிலிருந்து படத்துக்கான படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. படத்தில் நடிப்பவர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும்'' என்று முடித்துக்கொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க