வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (07/07/2017)

கடைசி தொடர்பு:20:42 (07/07/2017)

''கமல் சாரோடது கேமரா சத்தம்... எங்களோடது வேற சத்தம்!'' -சஸ்பென்ஸ் உடைக்கும் `டிக் டிக் டிக்' இயக்குநர் !

ஜெயம் ரவி, சக்தி சௌந்தர் கூட்டணியில்  `மிருதன்' படத்துக்குப் பிறகு உருவாகும் திரைப்படம் 'டிக் டிக் டிக்'.  இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் சக்தி சௌந்தரை படத்தின் அப்டேட்ஸ்க்காக தொடர்புகொண்டோம்.

Tiktiktik

`மிருதன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் எழுவதற்கு மட்டும் எனக்கு ஒன்பது மாதங்கள் ஆனது. விண்வெளி சம்பந்தபட்ட கதை என்பதால், ஸ்க்ரிப்டையும் தாண்டி இந்தப் படத்தின் கதைக்காக பல ஆராய்ச்சிகளில்  ஈடுபட்டேன்.  இஸ்ரோவில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகளிடம் எல்லாம் கலந்து பேசினேன். 

அதுக்கு அப்புறம்தான் ரவியை மீட் பண்ணினேன். நல்ல உடற்பயிற்சி செய்து நல்ல உடல்வாகு உள்ள நபரால்தான் இந்தக் கதையை பண்ண முடியும். அது ரவி சாரிடம் எனக்குக் கிடைத்தது. ஏன்னா, புவி ஈர்ப்பு விஷயங்கள் இல்லாத இடத்தில் எல்லாம் ரோப் கட்டிதான் எடுத்தோம். அதேபோல படத்தில் நடித்திருக்கும் நிவேதாவும் நல்ல ஃபிட்டான பொண்ணு. படத்தில் அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கும். படத்தின் டீசர் இரண்டு வாரத்துக்குள் வெளியிட முடிவு செய்துள்ளோம். 

tiktiktik

'டிக் டிக் டிக்' பெயரில் கமல் ஏற்கெனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். பிறகு ஏன்? என நீங்கள் கேட்கலாம். அதில் கேமராவுடைய 'க்ளிக்'காக அந்தப் பெயர் வைத்திருப்பார்கள். இந்தப் படத்தில் 'டிக் டிக் டிக்' என்பது கடிகாரத்தின் 'டிக்' ஒலியைக் குறிக்கும். டீசரை துல்லியமாக  62 வினாடிகள்தான் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். இந்தப் படத்தின் கதை இதுவரை இந்தியாவில் மட்டும் இல்லை.... ஏசியாவிலேயே யாரும் பண்ணியது இல்லை. `இந்தியாவில் முதல் முறையாக ' என்று டைட்டில் கார்டில் போடுவதற்காக இந்த மாதிரி ஸ்கிரிப்ட்டை எடுக்கவில்லை. நிறைய காரணம் இருக்கு. தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஆடியன்ஸ்  படம் பார்க்க வரணும். வருவார்கள். அதற்காகதான் இந்த மாதிரி ஸ்கிரிப்ட் தேடி எடுக்கிறேன். 

இந்தப் படத்தின் வில்லனை மலேசியா, சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்தோம். படத்தின் வில்லன்  ஆரோன்னுக்கும், ரவிக்கான ஆக்‌ஷன் பக்காவா இருக்கும். இந்தப் படத்தை எடுக்க நிறைய பட்ஜெட் தேவைப்படும். இந்த கதையை நான் தயாரிப்பாளர் ஹித்தேஷிடம் சொன்னவுடன் வேற யாராவது இந்த கதையைச் சொல்லியிருந்தால் தயாரித்திருக்க மாட்டேன். நீங்கள் சொன்னதால் தயாரிக்கிறேன் என்றார். அந்த வார்த்தை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது' என சொல்லி முடித்தார் இயக்குநர் சக்தி சௌந்தர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க