Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘சிம்புவின் 'கெட்டவன்' பற்றி நாங்கள் யோசிக்கவில்லை!''- டி.ராஜேந்தர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் , 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. சிம்பு, மூன்று கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படம் தோல்வியடைந்ததால், இதன் 'இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா... வேண்டமா ' என்ற யோசனையில் படக்குழு உள்ளது.

simbu


இந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகு, சிம்பு யாருடைய படத்தில் நடிக்கப்போகிறார் என்பது தெரியவில்லை. இந்தச் சூழலில், சிம்பு தனது நீண்ட நாள் புராஜெக்ட்டான  'கெட்டவன்' படத்தை கையில் எடுத்துவிட்டார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரான டி.ராஜேந்தர், இதை உறுதி செய்துவிட்டார் என்று தகவல் வந்தது.

இதுபற்றி டி.ஆரிடம் கேட்டோம், ‘‘சிம்பு இயக்கத்தில், 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம், 'கெட்டவன்'. இந்தப் படத்தின் உரிமை என்னிடம்தான் உள்ளது. படத்தின்  தயாரிப்பாளர் நான்தான். ஆனால், தற்போது சிம்புவும் நானும் அந்த புராஜெக்ட்டை கையில் எடுக்கவில்லை. இதுபற்றி நாங்கள் எதுவும் முடிவு செய்யவில்லை. சிம்பு, வேறு சில படங்களின் டிஸ்கஷனில் இருக்கிறார். 'கெட்டவன்' படத்தைப் பற்றி நாங்கள் இன்னும் பேசவில்லை'' என்றார், டி.ராஜேந்தர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close