Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தில் என் காஸ்ட்யூம்ஸ் எல்லாமே கடன் வாங்கியதுதான்..!' - அசோக் செல்வன்

அறிமுக இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், 'தெகிடி' படத்தின் ஹீரோ அசோக் செல்வன் நடித்திருக்கும் திரைப்படம், 'கூட்டத்தில் ஒருத்தன்'. விரைவில் ரிலீஸாகப்போகும் இந்தப் படத்தைப் பற்றி அசோக் செல்வனிடம் பேசினோம். 

கூட்டத்தில் ஒருத்தன்


'' ‘கூட்டத்தில் ஒருத்தன்' படம் என்னைத் தேடி வரவில்லை. நான்தான் இந்தக் கதையைத் தேடிப் போனேன். இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கும் நிவாஸ், என்னுடைய ஃப்ரெண்ட். என் அக்காவின் திருமணத்துக்காக நிவாஸுக்கு பத்திரிகை வைக்கச் சென்றபோது, 'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தின் ஒன்லைனை நிவாஸ் சொன்னான். எனக்குப் பிடித்துவிட்டது. உடனே, ஞானவேல் சாரை பார்த்து, ’நானே படத்தில் நடிக்கிறேன்’னு சொல்லி ஓகே வாங்கிட்டேன். படத்தில் என்னுடைய லுக்கைப் பார்த்துட்டு ’நல்லாயிருக்கு’னு சொன்னார். எங்க அப்பா, ’ரோட்டில் போறப்போ படத்தோட போஸ்டரைப் பார்த்தேன், நீ தானாடா அது' என்று கேட்டார்.
இந்த லுக்கில் வரும் ருத்ராட்சக்கொட்டை, கண்ணாடி எல்லாம் நிவாஸிடம் கடன் வாங்கினேன். செருப்பு, உதவி இயக்குநர்கிட்ட வாங்கினேன். இதுமாதிரி எங்களைச் சுற்றி கூட்டத்தில் இருந்தவர்களை ஃபாலோ பண்ணினோம்.  நிச்சயமா, இந்தப் படம் மிடில் பெஞ்ச் ஸ்டூடன்ட்ஸுக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, ஸ்கூல் படிக்கிறப்போ நானே மிடில் பெஞ்ச்தான்'' என்றார் அசோக் செல்வன்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement